ஆப்பில் உங்கள் டெலிவரி நபருக்கு வெகுமானத்தைச் சேர்த்திருந்தால், உங்கள் மொத்த ஆர்டர் தொகையில் வெகுமானமும் இருக்கும். வெகுமானம் வழங்குவது கட்டாயமில்லை என்றாலும் உங்கள் டெலிவரி நபரின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வெகுமானத்தைச் சேர்க்கலாம். நீங்கள் அளிக்கும் வெகுமானத்தின் 100% தொகையும் டெலிவரி செய்பவருக்கே செல்கிறது.
நீங்கள் ஆர்டருக்கு முன் ஒரு வெகுமானத்தைச் சேர்த்தால், ஆர்டர் முடிந்த பிறகு ஒரு மணிநேரம் வரை வெகுமானத் தொகையைத் திருத்தலாம். ஆர்டருக்குப் பிறகு வெகுமானம் வழங்கத் தேர்வுசெய்தால், ஆர்டர் முடிந்த 90 நாட்கள் வரை அதனைச் சேர்க்கலாம்.
உங்கள் டெலிவரி நபர் வரும்போது வெகுமானத்தைப் பணமாகவும் வழங்கலாம்.