விருப்பமான பேமெண்ட் முறையைச் சேர்ப்பது மற்றும் தேர்ந்தெடுப்பது பயணத்தைக் கோர உங்களை அனுமதிக்கும். உங்கள் நாடு மற்றும் நகரத்தைப் பொறுத்து, கிரெடிட் கார்டுகள், பணம் அல்லது PayPal கணக்கு போன்ற பேமெண்ட் முறைகளைச் சேர்க்கலாம். ஆர்டர் டெலிவரி செய்யப்பட்டவுடன், நீங்கள் தேர்ந்தெடுத்த பேமெண்ட் முறையில் கட்டணம் விதிக்கப்படும்.
பேமெண்ட் முறையைச் சேர்த்தல்
- "கணக்கு", என்பதைத் தட்டி பின்னர் "பணப்பை" என்பதைத் தட்டவும்.
- "பேமெண்டைச் சேர்" என்பதைத் தட்டவும்.
- கார்டை ஸ்கேன் செய்வதன் மூலமோ, கார்டு தகவலைக் கைமுறையாக உள்ளிடுவதன் மூலமோ அல்லது மாற்று பேமெண்ட் வகையைச் சேர்ப்பதன் மூலமோ பேமெண்ட் முறையைச் சேர்க்கவும்.
கிரெடிட் அல்லது டெபிட் கார்டை ஸ்கேன் செய்யவும்
- கார்டை ஸ்கேன் செய்ய, கேமரா ஐகானைத் தட்டவும். கேமராவை, ஆப் பயன்படுத்த உங்கள் மொபைல் அனுமதி கேட்கலாம்.
- உங்கள் மொபைலின் திரையில் கார்டை மையப்படுத்தவும், இதனால் கார்டின் 4 மூலைகளும் பச்சை நிறத்தில் ஒளிரும். பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் மற்றும் எண்கள் கொண்ட கார்டுகள் பொதுவாக ஸ்கேன் செய்ய எளிதானவை.
- கார்டின் காலாவதி தேதி, CVV எண் மற்றும் பில்லிங் ZIP அல்லது அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்.
- "சேமி" என்பதைத் தட்டவும்.
கைமுறையாக கிரெடிட் அல்லது டெபிட் கார்டைச் சேர்க்க:
- உங்கள் கார்டு எண்ணை உள்ளிடவும்.
- கார்டின் காலாவதி தேதி, CVV எண் மற்றும் பில்லிங் ZIP அல்லது அஞ்சல் குறியீட்டை உள்ளிடவும்.
- "சேமி" என்பதைத் தட்டவும்.
கார்டு தகவலைப் புதுப்பித்தல்
டெபிட் அல்லது கிரெடிட் கார்டின் காலாவதி தேதி, CVV எண் மற்றும் பில்லிங் ZIP அல்லது தபால் குறியீட்டை நீங்கள் திருத்தலாம்.
- "கணக்கு" என்பதைத் தேர்ந்தெடுத்து பின்னர் "பணப்பை" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- நீங்கள் புதுப்பிக்க விரும்பும் பேமெண்ட் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- மூன்று புள்ளிகளைக் கொண்ட ஐகானைத் தட்டவும், பின்னர் "திருத்துக" என்பதைத் தட்டவும்.
- மாற்றங்களைச் செய்த பின், "சேமி" என்பதைத் தட்டவும்.
டெபிட் அல்லது கிரெடிட் கார்டு எண்ணைத் திருத்த முடியாது என்றாலும், கார்டை உங்கள் கணக்கிலிருந்து அகற்றிவிட்டு மீண்டும் ஒரு புதிய பேமெண்ட் முறையாகச் சேர்க்கலாம்.
பேமெண்ட் முறையை நீக்குதல்
உங்கள் கணக்கு எல்லா நேரங்களிலும் குறைந்தது ஒரு பேமெண்ட் முறையைக் கொண்டிருக்க வேண்டும். உங்களின் ஒரே பேமெண்ட் முறையை நீக்க விரும்பினால், முதலில் புதிய ஒன்றைச் சேர்க்க வேண்டும்.
- "கணக்கு" என்பதைத் தேர்ந்தெடுத்து பின்னர் "பணப்பை" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- நீங்கள் நீக்க விரும்பும் கார்டைத் தேர்ந்தெடுக்கவும்.
- மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைக் கொண்ட ஐகானைத் தட்டவும்.
- "நீக்கு" என்பதைத் தட்டவும், பின்னர் உறுதிப்படுத்தவும்.