Uber Eats ரத்து கொள்கை என்றால் என்ன?

ஆதரவுக் குழுவைத் தொடர்புகொள்ளாமல் ஆர்டர்களை ரத்துசெய்ய Uber Eats ஆப் உங்களை அனுமதிக்கிறது. இருப்பினும், நீங்கள் ஆர்டரை எப்போது ரத்து செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து கட்டணம் விதிக்கப்படலாம்.

ஆப்பின் மூலம் நேரடியாக ஆர்டரை ரத்து செய்ய:

  1. உங்கள் ஆர்டர் நிலை திரைக்குச் சென்று, "ஆர்டரை ரத்துசெய்க" என்பதைத் தட்டவும்.
  2. நீங்கள் ரத்துசெய்ய விரும்புகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு பாப்-அப் தோன்றும் மற்றும் சாத்தியமான கட்டணங்கள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.
  3. "ஆர்டரை ரத்துசெய்க" என்பதைத் தட்டவும்.
  4. ஏன் ரத்து செய்ய முடிவெடுத்தீர்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து, "முடிந்தது" என்பதைத் தட்டவும்.

ஆர்டர் கட்டணங்களைச் சரிபார்க்க:

  1. ஆர்டர் பக்கத்தைப் பார்க்க கீழே உள்ள மெனு பட்டியில் இருந்து ரசீது ஐகானைத் தட்டவும்.
  2. ரத்துசெய்யப்பட்ட ஆர்டரைக் கண்டுபிடிக்கும் வரை ஸ்க்ரோல் செய்யவும்.
  3. "ரசீதைக் காட்டு" என்பதைத் தட்டவும்.