பிக்அப் ஆர்டர் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பிக்அப் ஆர்டர் என்றால் என்ன?

பிக்அப் ஆர்டர் என்பது, நீங்கள் ஆப் மூலம் ஆர்டர் கொடுத்துவிட்டு பிறகு மெர்ச்சன்டிடம் சென்று அதைப் பெற்றுக்கொள்வது. இதில், ஆர்டரின் வெவ்வேறு படிநிலைகளைப் பார்க்கவும், பெறுவதற்கு ஆர்டர் தயாராக உள்ள நேரத்தைத் தெரிந்துகொள்ளவும் முடியும்.

குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே பிக்அப் வசதி உள்ளது.

டைன்-இன் ஆர்டர் என்றால் என்ன?

டைன்-இன் ஆர்டர் என்பது, நீங்கள் ஆப் மூலம் ஆர்டர் கொடுத்துவிட்டு பிறகு மெர்ச்சன்டிடம் சென்று அதைப் பெற்றுக்கொள்வது. நீங்கள் விரும்பினால் உணவகத்திலேயே சாப்பிடலாம்.

குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே டைன்-இன் வசதி உள்ளது.

மெர்ச்சன்ட்டின் இடத்தைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் என்ன செய்வது?

நீங்கள் ஆர்டர் செய்த மெர்ச்சன்ட்டை கண்டுபிடிப்பதில் சிக்கல் இருந்தால், மேலும் உதவிக்கு அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்.

ஒரு பிக்அப் ஆர்டரைச் செய்வது எப்படி?

  1. ஆப்பைத் திறக்கவும்
  2. "பிக்அப்" உண்ணும் முறையைத் தேர்ந்தெடுக்கவும்
  3. "விரைவான" ஆர்டர் அல்லது "நேரம் குறித்த" ஆர்டர் என்பதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். பிக்அப் விருப்பத்தில், மெர்ச்சன்ட்களுக்குரிய தயாரிப்பு நேரம், தூரம், விலை மற்றும் தரமதிப்பீடு காண்பிக்கப்படும்.
  4. நீங்கள் ஒரு பிக்அப் ஆர்டர் கொடுத்த பின், மெர்ச்சன்ட் அதை ஏற்கும்போது ஒரு அறிவிப்பு வரும், அதில் ஆர்டர் தயாராவதற்கான கணிப்பு நேரம் இருக்கும், மேலும் அது பெற்றுக்கொள்ளத் தயாராகவுள்ள போதும் ஒரு அறிவிப்பு வரும்.

ஒரு டைன்-இன் ஆர்டரைச் செய்வது எப்படி?

  1. ஆப்பைத் திறக்கவும்
  2. "டைன்-இன்" உண்ணும் முறையைத் தேர்ந்தெடுக்கவும்
  3. "விரைவான" ஆர்டர் அல்லது "நேரம் குறித்த" ஆர்டர் என்பதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். டைன்-இன் விருப்பத்தில், மெர்ச்சன்ட்களுக்குரிய தயாரிப்பு நேரம், தூரம், விலை மற்றும் தரமதிப்பீடு காண்பிக்கப்படும்.
  4. நீங்கள் ஒரு டைன்-இன் ஆர்டர் கொடுத்த பின், மெர்ச்சன்ட் அதை ஏற்கும்போது ஒரு அறிவிப்பு வரும், அதில் ஆர்டர் தயாராவதற்கான கணிப்பு நேரம் இருக்கும்.

எனது ஆர்டர் எண் எங்கே இருக்கும்?

கண்காணிப்புத் திரையின் மேற்புறத்தில் உங்கள் முதல் பெயர் மற்றும் கடைசி முதலெழுத்துக்குக் கீழே ரசீதில் ஆர்டர் அடையாள எண் இருக்கும்.

நீங்கள் சரியான ஆர்டரையே பெறுகிறீர்கள் என்பதை உறுதிசெய்ய ஒவ்வொரு ஆர்டருக்கும் ஓர் ஆர்டர் அடையாள எண் இருக்கும்.

நீங்கள் ஆர்டரைப் பெறும்போது, உங்கள் ஆர்டர் அடையாள எண்ணை மெர்ச்சன்ட்டிடம் கூறி அதைச் சரிபார்த்துக் கொள்ளவும்.

எனது பிக்அப் அல்லது டைன்-இன் ஆர்டரைப் பெற்றுக் கொள்வதற்கான நேரத்தை எப்படி அறிவது?

ஆர்டர் தயாரானதும் ஆப்ஸ் உங்களுக்குத் தெரிவிக்கும்.