அணுகல்தன்மை: TalkBack ஐ பயன்படுத்துவது எப்படி

ஆப் உடன் TalkBack ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

உங்கள் டெலிவரி இடம் மற்றும் டெலிவரி நேரத்தை அமைத்தல்

ஆப்பில் முதன்முறையாகப் பதிவுசெய்த பிறகு, முதலில் டெலிவரி செய்வதற்கான உங்கள் இருப்பிடத்தை உள்ளிடுமாறு உங்களிடம் கேட்டுக் கொள்ளப்படும்.

நீங்கள் ஏற்கனவே முகப்புத் திரையில் இருந்தால், இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

  1. முகப்புத் திரையில் இருந்தபடியே திரையின் மேல் இடதுபுறத்தில் இருமுறை தட்டவும்.
  2. உங்கள் முகவரியை உள்ளிடவும் அல்லது பரிந்துரைக்கப்படும் இடங்களின் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
  3. டெலிவரி நேரத்தை அமைத்தல் (விரைவான அல்லது திட்டமிடப்பட்ட நேரத்தில் டெலிவரி.)

டெலிவரி விவரங்களை உள்ளிட்டு முடித்ததும், நீங்கள் ஆர்டர் செய்ய ஏதுவாக அருகிலுள்ள மெர்ச்சன்ட்களைக் கண்டறிவோம்.

டெலிவரி இடத்தையும் நேரத்தையும் மாற்றி அமைத்தல்

டெலிவரி விவரங்கள் பக்கத்திற்குப் பதிலாக முகப்பு ஊட்டப் பக்கத்திற்குத் தானாகச் சென்றால், டெலிவரி முகவரியானது நீங்கள் கடைசியாக உள்ளிட்ட முகவரியாக இருக்கும்.

ஆனால், அதற்கு முன் முகவரியை மாற்ற விரும்பினால், இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  1. முகப்புத் திரையில் இருந்தபடியே திரையின் மேல் இடதுபுறத்தில் இருமுறை தட்டவும்.
  2. உங்கள் முகவரியை உள்ளிடவும் அல்லது பரிந்துரைக்கப்படும் இடங்களின் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.
  3. டெலிவரி நேரத்தை அமைத்தல் (விரைவான அல்லது திட்டமிடப்பட்ட நேரத்தில் டெலிவரி.)

மெர்ச்சன்ட்களைத் தேர்ந்தெடுத்தல்

முகப்புத் திரை ஊட்டத்தில், நீங்கள் ஆர்டர் செய்யக்கூடிய பல்வேறு மெர்ச்சன்ட்களின் தேர்வுகளை நாங்கள் பட்டியலிடுகிறோம். பரிந்துரைகளைப் பார்க்க இடது அல்லது வலதுபுறமாக தேய்க்கவும்.

திரையின் அடிப்பகுதியில் உள்ள தேடுக என்ற தாவலைச் செயல்படுத்துவதன் மூலமும் நீங்கள் தேடுக என்பதற்குச் செல்லலாம்:

  1. திரையின் அடிப்பகுதியில் ஒருமுறை தட்டவும்.
  2. முகப்புத் தாவலுக்கு அடுத்ததாக உள்ள தேடுக என்ற தாவலை இருமுறை தட்டுவதன் மூலம் செயல்படுத்தலாம்.
  3. அங்கு சென்றதும், பரிந்துரைக்கப்பட்ட சமையல் வகைகள் அல்லது மெர்ச்சன்ட்/உணவு/சமையல் வகைகளின் அடிப்படையில் தேடுவதைத் தேர்வுசெய்யவும்.

ஆர்டர் செய்தல்

நீங்கள் ஆர்டர் செய்ய விரும்பும் மெர்ச்சன்ட்டைத் தேர்ந்தெடுத்ததும், பின்வரும் படிகளைப் பின்பற்றவும்:

  1. கடையின் மெனு பக்கத்திலிருந்து, "கார்ட்டில் சேர்" விருப்பத்தேர்வை இருமுறை தட்டுவதன் மூலம் கார்ட்டில் பொரு(ட்க)ளைச் சேர்க்கவும்.
  2. நீங்கள் ஆர்டர் செய்ய விரும்பும் அனைத்தையும் சேர்க்கும் வரை இதை மீண்டும் செய்யவும்.
  3. உங்கள் கார்ட்டில் பொருட்களைச் சேர்த்து முடித்ததும், "கார்ட்டைக் காட்டு" விருப்பம் கேட்கும் வரை தேய்க்கவும். செக் அவுட் பக்கத்திற்குச் செல்ல இருமுறை தட்டவும்.
  4. அதன்பின், பின்வரும் ஆர்டர் விவரங்களைப் பரிசீலித்துக் கொள்ளலாம்: டெலிவரி முகவரி/நேரம், கார்ட்டில் உள்ள பொருட்கள், பேமெண்ட் முறைகளை உறுதிப்படுத்தல் மற்றும் ஊக்கத்தொகைக் குறியீடுகளைச் சேர்த்தல் (ஏதேனும் இருந்தால்).
  5. நீங்கள் இதை மதிப்பாய்வு செய்து முடித்ததும், ""ஆர்டர் செய்யவும்"" என்ற விருப்பத்தேர்வைக் கேட்கும் வரை தேய்த்து ஆர்டர் செய்யவும். அதைத் தேர்ந்தெடுக்க இருமுறை தட்டவும்.

உங்கள் ஆர்டரை ரத்துசெய்தல்

"ஆர்டர் செய்யவும்" பொத்தானை அழுத்திய பின் இந்த ஆப் ஒரு கோரிக்கை நிலைக்கு மாறும்.

உங்கள் ஆர்டரை ரத்து செய்ய:

  1. "ரத்துசெய்" பொத்தானை ஹைலைட் செய்ய வலதுபுறம் விரைவாக நகர்த்தவும்.
  2. உங்களுக்குப் பொருத்தமான ஒரு டெலிவரி நபர் கிடைத்தவுடன், "ரத்துசெய்" பொத்தானுக்கு அருகில் "தொடர்புகொள்க" பொத்தான் சேர்க்கப்படும்.

உங்கள் ஆர்டருக்காகக் காத்திருத்தல்

ஆப்பில் உள்ள ETA விருப்பத்தேர்வு உங்கள் ஆர்டர் எப்போது வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும். ETA அம்சத்தை ஹைலைட் செய்து, உங்கள் ஆர்டர் எவ்வளவு விரைவில் வரும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். உங்களுக்கு பொருத்தமான டெலிவரி நபர் கிடைத்தவுடன், டெலிவரி செய்பவரின் பெயர், வாகனத்தின் மாடல், தரமதிப்பீடு மற்றும் உரிமத் தகடு எண் ஆகியவற்றைக் கேட்க திரையின் அடிப்பகுதியில் உள்ள அட்டையை ஹைலைட் செய்யலாம்.

உங்கள் ஆர்டர் மற்றும் டெலிவரி செய்யும் நபருக்குத் தரமதிப்பிடுதல்

ஓர் ஆர்டரை முடித்த பிறகு, முகப்புத் திரையின் மேற்புறம் ஒரு தரமதிப்பீட்டு அட்டை தோன்றும். டெலிவரி செய்பவர் மற்றும் மெர்ச்சன்டிற்குத் தரமதிப்பிடவும் டெலிவரி செய்பவருக்கு வெகுமானம் வழங்கவும் கார்டை இருமுறை தட்டவும்.

கணக்கு அமைப்புகள்

திரையின் கீழ் வலது மூலையில் தட்டுவதன் மூலம் கணக்குத் தாவலை அணுகலாம். கிடைக்கக்கூடிய விருப்பங்கள்:

  • கணக்கு: உங்களுக்குப் பிடித்த டெலிவரி முகவரியை இங்கே பதிவேற்றலாம். இதனால் நீங்கள் முகவரியை எப்போது மாற்ற விரும்பினாலும் கைமுறையாக அதை உள்ளிட வேண்டியதில்லை. ”கணக்கைத் திருத்துக” என்ற விருப்பத்தேர்வைத் தேர்ந்தெடுத்தும் உங்கள் தொலைபேசி எண்ணைத் திருத்தலாம்.
  • உங்களுக்குப் பிடித்தவை: ஏற்கனவே நீங்கள் அடையாளக்குறியிட்டு வைத்த அல்லது இதற்கு முன் ஆர்டர் செய்த மெர்ச்சன்ட்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
  • பேமெண்ட்: பேமெண்ட் முறையை மாற்ற அல்லது சேர்க்க உங்களை அனுமதிக்கிறது.
  • உதவி: அணுகல்தன்மை தொடர்பான சிக்கல்களைப் புகாரளித்தல் உட்பட பல்வேறு ஆதரவு விருப்பத்தேர்வுகளை வழங்குகிறது.
  • ஊக்கத்தொகைகள்: உங்கள் கணக்குடன் தொடர்புடைய தற்போதைய ஊக்கத்தொகைகளை இங்கே பார்க்கலாம் அல்லது புதிய ஊக்கத்தொகைக் குறியீட்டைச் சேர்க்கலாம்.
  • இலவச உணவு: நண்பர்களைப் பரிந்துரைப்பதன் மூலம் எதிர்கால ஆர்டர்களுக்கான கிரெடிட்களைப் பெற இந்த விருப்பத்தேர்வைப் பயன்படுத்தலாம். உங்கள் ரெஃபரல் அழைப்புக் குறியீட்டை இங்கே காணலாம்.
  • எங்கள் மூலம் டெலிவரி செய்யயுங்கள்: டெலிவரி நபராக விண்ணப்பச் செயல்முறையைத் தொடங்க உங்களை அனுமதிக்கிறது.
  • அமைப்புகள்: மேலே பட்டியலிடப்பட்டுள்ள கணக்கு விருப்பத்தின் அதே விவரங்கள்.