வெகுமானத்தை மாற்றுதல்

ஆர்டரைச் செய்யும்போது டெலிவரி செய்பவருக்கு வெகுமானத்தை நீங்கள் சேர்த்திருந்தால், ஆர்டர் கிடைத்த ஒரு மணிநேரம் வரை வெகுமானத் தொகையைத் திருத்தலாம்.

வெகுமானத்தை 2 வழிகளில் மாற்றலாம்

1. ஆப்பில் உள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்

ஆர்டர் வந்த பிறகு, உங்களுக்கு விருப்பம் இருந்தால், டெலிவரி செய்பவருக்கு தரமதிப்பீட்டையும் வெகுமானத்தையும் சேர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவீர்கள்:

  1. உங்கள் தரமதிப்பீட்டைச் சேர்ப்பதற்கும், உங்களின் தற்போதைய வெகுமானத் தொகையைப் பார்ப்பதற்கும் திரையில் உள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்.
  2. தொகையை மாற்ற "திருத்துக" என்பதைத் தட்டவும்.
  3. உங்கள் புதிய வெகுமானத் தொகையைச் சேமிக்க, "சேமித்துத் தொடரவும்" என்பதைத் தட்டவும்.

2. "ஆர்டர்கள்" பிரிவில் இருந்து

  1. முதன்மைத் திரையில் இருந்து, "கணக்கு" பின்னர் "ஆர்டர்கள்" என்பதைத் தட்டவும்.
  2. உங்கள் ஆர்டரைக் கண்டுபிடித்து அதைத் தேர்ந்தெடுக்க உருட்டவும்.
  3. வெகுமானத்திற்கு அடுத்துள்ள "தொகையைத் திருத்துக" என்பதைத் தட்டவும்.

உங்கள் வெகுமனத்தைத் திருத்துவதற்கான விருப்பம் ஆர்டர் டெலிவரி செய்யப்பட்ட பிறகு ஒரு மணிநேரம் வரை கிடைக்கும்.

நீங்கள் ஆர்டரைச் செய்த பிறகும் டெலிவரி செய்பவருக்கு ஒரு வெகுமானத்தைச் சேர்க்கலாம். *ஆர்டர் டெலிவரி செய்யப்பட்ட பிறகு சேர்க்கப்பட்ட வெகுமானங்களை மாற்ற முடியாது. *