பரிசு டெலிவரிகள் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பரிசு டெலிவரிகள் என்றால் என்ன?

பரிசு டெலிவரிகள் என்பது உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு - விடுமுறை நாட்கள் போன்ற அன்றாட நிகழ்வுகளுக்கு அல்லது நன்றி அல்லது வாழ்த்துப் பரிசாக நீங்கள் அனுப்பக்கூடிய ஆர்டர்கள் ஆகும். நீங்கள் தனிப்பட்ட குறிப்பைச் சேர்க்கலாம் மற்றும் ஆப்பில் டெலிவரியைக் கண்காணிக்கலாம்.

பரிசு டெலிவரிக்கான விருப்பத்தேர்வுகளை நான் எங்கே பார்க்கலாம்?

ஆர்டர் செய்யும் முன் பரிசு டெலிவரிக்கான விருப்பத்தேர்வுகளை நீங்கள் செக்அவுட் திரையில் காணலாம்.

பரிசு டெலிவரிகளுக்கு அதிக செலவாகுமா?

இல்லை, பரிசு டெலிவரிகளுக்குக் கூடுதல் கட்டணம் இல்லை.

எனது பரிசு டெலிவரி ஆர்டரை எப்படிக் கண்காணிப்பது?

  1. Uber Eats ஆப்பில், கீழே உள்ள மெனு பட்டியில் "ஆர்டர்கள்" என்பதைத் தட்டவும்.
  2. உங்கள் பரிசு டெலிவரி ஆர்டரைக் கண்டுபிடித்து அதைக் கண்காணிக்க "கடந்த ஆர்டர்கள்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

நான் பரிசு அனுப்பியது குறித்து பெறுநருக்குத் தெரிவிப்பீர்களா?

ஆம், பரிசு வந்துக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவிக்கும் வகையில் பெறுநருக்கு உரை செய்தியை நாங்கள் அனுப்புவோம். அதைப் பின்பற்றி பெறுநரும் Uber Eats ஆப் அல்லது இணையதளத்தில் பரிசின் டெலிவரி நிலையைக் கண்காணிக்கலாம். பரிசு டெலிவரி செய்யப்பட்ட உடன் அதை நீங்களும் பெறுநருக்குத் தெரியப்படுத்தலாம்.

பரிசு டெலிவரி செய்யப்பட்டதா என்பதை நான் எப்படித் தெரிந்துகொள்வது?

Uber Eats ஆப்பின் "ஆர்டர்கள்" பிரிவில் பரிசு டெலிவரி நிலையை நீங்கள் கண்காணிக்கலாம். பரிசு டெலிவரி செய்யப்பட்டவுடன் அதற்கான அறிவிப்பையும் நீங்கள் பெறுவீர்கள்.

பரிசு ஆர்டரில் எனக்கு வேறு சிக்கல் இருந்தால் அல்லது ஆர்டர் வரவில்லை என்றால் என்ன செய்வது?

பரிசு ஆர்டரில் உங்களுக்கு வேறு சிக்கல் இருந்தால் அல்லது ஆர்டர் கிடைக்காத அரிதான நிகழ்வில் help.uber.com தளத்திற்குச் சென்று எங்கள் ஆதரவுக் குழுவைத் தொடர்பு கொள்ளவும்.