எனது கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்

உங்கள் கணக்கை வேறொருவர் பயன்படுத்தியுள்ளார் என்று சந்தேகித்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டால், உங்கள் கணக்கு திருடப்பட்டிருக்கலாம்.

சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளில் அடங்குபவை:

  • நீங்கள் செய்யாத ஆர்டர் கோரிக்கைகள்
  • நீங்கள் கோராத நிறைவடைந்த ஆர்டர்கள்
  • நீங்கள் கோராத ஆர்டர்களைப் பற்றி டெலிவரி செய்பவர்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் அல்லது உரைச்செய்திகள்
  • உங்கள் கணக்கில் உங்களால் அடையாளம் காண முடியாத ஆர்டர்களுக்கான ரசீதுகள்
  • நீங்கள் செய்யாத கணக்கு மாற்றங்கள்
  • உங்கள் பேமெண்ட் சுயவிவரத்தில் நீங்கள் செய்யாத மாற்றங்கள்
  • உங்களுக்குத் தெரியாமல் கடவுச்சொல் அல்லது மின்னஞ்சல் முகவரி புதுப்பிக்கப்பட்டுள்ளது

குறிப்பு: ஒரே மாதிரியான இரண்டு கட்டணங்களை நீங்கள் கண்டால், இது அங்கீகாரப் பிடித்தமாக இருக்கலாம், அது ஒரு சில நாட்களில் மறைந்துவிடும்.

உங்கள் கணக்கில் உள்நுழைய முடிந்தால், உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்கும்படி பரிந்துரைக்கிறோம்.

உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது:

  1. ஆப் மெனுவில் "உதவி" என்பதற்குச் செல்லவும்.
  2. "கணக்கு மற்றும் பேமெண்ட் விருப்பங்கள்" என்பதன் கீழ், "மேலும் >" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. "எனது கடவுச்சொல்லை மறந்துவிட்டேன்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. புதிய மற்றும் தனித்துவமான கடவுச்சொல்லை உருவாக்குவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும்.

உங்கள் கணக்கில் உள்நுழைய முடியாவிட்டால், உங்கள் மொபைல் எண் மற்றும் விவரங்களைக் கீழே பகிரவும்: