நான் ஒரு பேமெண்ட்டை Uber Cash க்கு மாற்ற விரும்புகிறேன்

ஒரு முந்தைய ஆர்டருக்கு Uber Cash பயன்படுத்த விரும்பினால், உங்கள் பேமெண்ட்டை மாற்றிக்கொள்ளலாம், எனினும் அந்தப் பரிவர்த்தனையின் முழு விலைக்கும் தேவையான அளவு Uber Cash உங்கள் கணக்கில் இருக்க வேண்டும்.

நீங்கள் ஏற்கனவே வேறொரு பேமெண்ட் முறையில் ஓர் ஆர்டருக்குப் பணம் செலுத்திவிட்டு பிறகு Uber Cash பயன்படுத்த விரும்பினால், இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

  1. உங்கள் ஆப்பின் மேற்புற இடது மூலையில் மெனு ஐகானைத் தட்டவும்.
  2. "உங்கள் பயணங்கள்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. எந்தப் பயணத்துக்கு பேமெண்ட் முறையை மாற்ற விரும்புகிறீர்களோ அதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. “இந்தப் பயணத்திற்கு உதவி தேவையா?” என்பதன் கீழ் பேமெண்ட் முறையை மாற்றுவதற்கான பெட்டி இருக்கும், அங்கே "பேமெண்ட் முறையை திருத்துக" என்பதைத் தட்டவும்.
  5. "பயணத்திற்கான பேமெண்ட் முறையை மாற்றுக" என்பதைத் தேர்ந்தெடுத்து, அடுத்து என்பதைத் தட்டவும்.
  6. "Uber Cash" என்பதைத் தேர்ந்தெடுத்து, "அடுத்து/சமர்ப்பி" என்பதைத் தட்டவும்.

நீங்கள் ஏற்கனவே வேறொரு பேமெண்ட் முறையில் ஓர் ஆர்டருக்குப் பணம் செலுத்திவிட்டு பிறகு Uber Cash ஐப் பயன்படுத்த விரும்பினால், இந்தப் படிகளைப் பின்பற்றவும்:

  1. "ஆர்டர் செய்யவும்" என்பதைத் தட்டவும்.
  2. சம்பந்தப்பட்ட ஆர்டரை தேர்ந்தெடுத்து, "உதவி பெறுக" என்பதைத் தட்டவும்.
  3. "பேமெண்ட் முறையை மாற்று" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. Uber Cash என்பதைத் தேர்ந்தெடுத்து "சமர்ப்பிக்கவும்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இந்தச் செயல்முறை வேலை செய்யவில்லை என்றால், உங்கள் Uber Cash இருப்புத் தொகையில் ஆர்டரின் விலைக்கு சமமான அல்லது அதிகமான தொகை தேவைப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Uber Cash க்குப் பேமெண்ட்டை மாற்றுவது தொடர்பான கேள்விகளுக்கு, கீழே எங்களுடன் கூடுதல் விவரங்களைப் பகிரவும்.