எனது டெலிவரி முகவரியை மாற்றுதல்

தற்போதைய ஆர்டரில் உங்கள் டெலிவரி முகவரியை மாற்ற:

1. உங்கள் Uber Eats ஆப்-ஐத் திறந்து ஆர்டர் கண்காணிப்புத் திரைக்குச் செல்லவும்.

2. 'உதவி' என்பதைத் தட்டி, 'உதவி பெறுக' என்பதைத் தட்டவும்.

3. 'எனது முகவரியை மாற்று' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

4. புதிய முகவரியைச் சேர்க்கவும்.

5. திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றவும்.

உங்கள் புதிய டெலிவரி முகவரி:

- அதே டெலிவரிக் கட்டணம் அல்லது அதற்குக் குறைவானது: தயாராகிவிட்டீர்கள், புதிய டெலிவரி முகவரி புதுப்பிக்கப்பட்டது.

- அதே டெலிவரிக் கட்டணம்தான் ஆனால் உங்கள் டெலிவரி செய்பவர் ஏற்கனவே டெலிவரியைத் தொடங்கிவிட்டார்: உங்களுக்குக் காட்டப்பட்ட புதுப்பிக்கப்பட்ட டெலிவரிக் கட்டணத்தை ஏற்கவும் அல்லது ஆர்டரை ரத்து செய்யவும். குறிப்பு: சில ரத்துசெய்தல்களுக்குக் கட்டணம் மற்றும்/அல்லது பணத்தைத் திருப்பித் தர வேண்டியதில்லை.

- அதிக டெலிவரிக் கட்டணம்: உங்களுக்குக் காட்டப்பட்ட புதுப்பிக்கப்பட்ட டெலிவரிக் கட்டணத்தை ஏற்கவும் அல்லது ஆர்டரை ரத்து செய்யவும். குறிப்பு: சில ரத்துசெய்தல்களுக்குக் கட்டணம் மற்றும்/அல்லது பணத்தைத் திருப்பித் தர வேண்டியதில்லை.

- உணவகத்தின் டெலிவரி மண்டலத்திற்கு வெளியே: அசல் டெலிவரி முகவரியை வைத்திருக்கவும் அல்லது ஆர்டரை ரத்து செய்யவும். குறிப்பு: சில ரத்துசெய்தல்களுக்குக் கட்டணம் மற்றும்/அல்லது பணத்தைத் திருப்பித் தர வேண்டியதில்லை.

டெலிவரிக் கட்டணப் புதுப்பிப்புகள் அனைத்தும் உங்கள் ரசீதில் 'டெலிவரி சரிசெய்தல்' என்பதற்கு அடுத்ததாக பட்டியலிடப்படும்.

டெலிவரிக்கான கட்டணம் செலுத்த உதவும் வகையில் டெலிவரி சரிசெய்தல்கள் தானாகவே புதுப்பிக்கப்படும்.