நீங்கள் ஆர்டர் கொடுக்கும்போது, ஓர் அங்கீகாரப் பிடித்தத்தை உருவாக்குகிறது. இவை கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். உங்கள் நிதிகளிலிருந்து தடையின்றி கட்டணம் செலுத்த முடியும் என்பதை உறுதிசெய்ய இந்த அங்கீகாரப் பிடித்தங்கள் எங்களுக்கு உதவும். இவை பேமெண்ட் கட்டணங்கள் அல்ல.
அங்கீகாரப் பிடித்தங்கள் தற்காலிகமானதே, உங்கள் வங்கி அறிக்கையில் உள்ள நிலுவைப் பரிவர்த்தனை ஒருசில நாட்களில் மறைந்துவிடும்.
குறிப்பு: நீங்கள் ஆர்டரை ரத்துசெய்த பிறகும் அதற்கான அங்கீகாரப் பிடித்தம் காண்பிக்கப்பட்டால், பணத்தைத் திரும்பப் பெற 3-10 நாட்கள் ஆகலாம்.
அங்கீகாரப் பிடித்தம் குறித்து மேலும் தகவலுக்கு, எங்களது அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் பார்க்கவும்:
ஒரு ஆர்டருக்காக என்னிடம் ஏன் இரண்டு முறை கட்டணம் வசூலிக்கப்பட்டது?
சில சமயங்களில், உண்மையான கட்டணத்துக்குரிய அதே வேகத்தில் அங்கீகாரப் பிடித்தம் செயல்படுவதில்லை, இதனால் இருமுறை கட்டணம் வசூலிக்கப்பட்டது போல் தோன்றும். எனவே, இது இருமுறை கட்டணம் வசூலிக்கப்பட்டதை குறிப்பதில்லை. இதற்குக் காரணம், நீங்கள் முதலில் ஆர்டர் கொடுக்கும் போது, நாங்கள் உங்கள் பேமெண்ட் முறை சார்ந்து ஒரு தற்காலிகக் கட்டணத்தை வசூலிப்போம், அது ஒரு பிடித்தமாக செயல்படும்.
உங்கள் ஆர்டர் ரத்து செய்யப்பட்டால், தற்காலிக அங்கீகாரப் பிடித்தம் ஒருசில வணிக நாட்களுக்குள் திருப்பப்படும்.
அங்கீகாரப் பிடித்தம் எப்போது அகற்றப்படும்?
கட்டணம் செலுத்தப்பட்ட பிறகு வழக்கமாக 3-10 வணிக நாட்கள் ஆகும். உங்கள் வங்கியின் செயலாக்க நேரம் அல்லது கொள்கையைப் பொறுத்து சில சமயங்களில் அதைவிட அதிக நேரம் ஆகலாம்.
அங்கீகாரப் பிடித்தம் பற்றிய கூடுதல் தகவல்களை எங்கே பெற முடியும்?
உங்கள் வங்கி அறிக்கையில் உள்ள அங்கீகாரப் பிடித்தம் பற்றி மேலும் தகவல்களைப் பெற விரும்பினால், உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளவும்.
உங்கள் கணக்கிலிருந்து பணம் வெளியேறவில்லை என்பதை அவர்களால் உறுதிசெய்ய முடியும். தங்கள் அங்கீகாரப் பிடித்தம் செயல்முறை பற்றி மேலும் தகவல்களையும், உங்கள் வங்கி அறிக்கையிலிருந்து வரி உருப்படி எப்போது நீங்கும் என்பது குறித்து ஒரு தெளிவான கால வரம்பையும் அவர்களால் வழங்க முடியும்.