வணிகக் குழு ஆர்டரை எவ்வாறு வைப்பது

நீங்கள் குழுவாக ஆர்டரைச் செய்யத் தொடங்கும்போது, பகிரக்கூடிய ஓர் இணைப்பைப் பெறுவீர்கள். அதன் மூலம் அதே வணிகக் குழு ஆர்டரில் பிறர் தங்களுக்கு விருப்பமானவற்றைச் சேர்க்க முடியும். இவற்றைச் செய்யலாம்:

  • நீங்களே அனைவருக்கும் பணம் செலுத்தலாம்
  • ஒவ்வொரு விருந்தினரும் அவரவர் பங்கிற்கு பணம் செலுத்தலாம்

வணிகக் குழுவிற்கான ஆர்டரைச் செய்யநீங்கள் ஒரு வணிக சுயவிவரத்தை உருவாக்க வேண்டும். வணிகச் சுயவிவரம் இல்லாமல், உங்கள் நிறுவனத்தின் மேமெண்ட் முறையில் உணவிற்கான பணத்தைச் செலுத்த முடியாது.

வணிகக் குழுவிற்கான ஆர்டரைச் செய்ய:

  1. Uber Eats ஆப்பில் உள்நுழையவும் அல்லது ubereats.com என்ற தளத்திற்குச் செல்லவும்.
  2. உங்கள் வணிகச் சுயவிவரத்தைத் தேர்ந்தெடுத்து, பின் நீங்கள் ஆர்டர் செய்ய விரும்பும் மெர்சென்டைக் கண்டறியவும்.
  3. "குழு ஆர்டர்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. டெலிவரி முகவரி அல்லது செலவு வரம்பு போன்ற குழு ஆர்டரின் நீங்கள் திருத்த விரும்பும் விவரங்களைத் திருத்தவும். நீங்களே அனைவருக்கும் பணம் செலுத்துதல் அல்லது பில் தொகையைப் பகிர்ந்து கொள்ளுதல் என்பதையும் தேர்வு செய்யலாம்.
  5. "விருந்தினர்களை அழைக்கவும்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் அனுப்புவதற்கான இணைப்பை வழங்கும்.
  6. நீங்களும் ஆர்டரில் பங்கேற்கிறீர்கள் என்றால் உங்களுக்கானப் பொருட்களைச் சேர்க்கவும்.
  7. அனைவரும் தங்கள் பொருட்களைச் சேர்த்தவுடன், "ஆர்டரைக் காண்க" மற்றும் "செக் அவுட்டுக்குச் செல்க" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  8. குழு ஆர்டர் தயாராக இருந்தால், “ஆர்டரை உறுதிசெய்து தொடர்க” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உறுதி செய்த பின், விருந்தினர்களால் கூடுதல் பொருட்களைச் சேர்க்கவோ திருத்தவோ முடியாது. அது தயாராகவில்லை என்றால், "திரும்பச் செல்க" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  9. ஆர்டர் விவரங்களை மீண்டும் மதிப்பாய்வு செய்து, திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  10. "குழு ஆர்டர் செய்க" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.