டெலிவரி செய்யும் நபரை நீங்கள் எங்கு சந்திக்க வேண்டும் என்பது நீங்கள் ஆர்டர் செய்யும் போது தேர்ந்தெடுத்த 3 டெலிவரி விருப்பத்தேர்வுகளைப் பொறுத்தது:
உங்களுக்கு விருப்பமான டெலிவரி விருப்பத்தேர்வைத் தேர்ந்தெடுத்த பிறகு, உங்கள் டெலிவரி விவரங்களைப் புதுப்பிக்க, திரையில் தோன்றும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
நீங்கள் வேறு சிறப்பு டெலிவரி அறிவுறுத்தல்களை வழங்க வேண்டியிருந்தால், உங்கள் ஆர்டரை உறுதிசெய்வதற்கு முன் அவற்றைச் சேர்க்கலாம். உதாரணமாக, வாசலில் வைத்துவிட்டுச் செல்லவும் என்ற டெலிவரி விருப்பத்தேர்வை நீங்கள் தேர்ந்தெடுத்தால், பின்வருவன போன்ற சிறப்பு அறிவுறுத்தல்களைச் சேர்க்கலாம்: “தயவுசெய்து எனது ஆர்டரை முன்புறக் கதவுக்கு அருகிலுள்ள பூந்தொட்டிக்குப் பக்கத்தில் வைத்துவிட்டுச் செல்லவும். நன்றி!”.
உங்கள் ஆர்டர் தயாரானவுடன், ஆர்டர் கண்காணிப்புத் திரையில் தொடர்புகொள்க என்பதைத் தட்டுவதன் மூலம் உங்கள் டெலிவரி செய்யும் நபரை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம். டிராப்ஆஃப் செய்யும் இடம் எங்கே இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், சரியான டிராப்ஆஃப் செய்யும் இடத்தை ஒருங்கிணைக்க இது பெரும்பாலும் சிறந்த வழியாகும். உங்கள் டெலிவரி செய்யும் நபர் வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கலாம் என்பதால் தொலைபேசிக்கு பதிலளிக்கவோ அல்லது செய்தியை எழுதவோ முடியாமல் போகலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.