நீங்கள் குழுவாக ஆர்டரைச் செய்யத் தொடங்கும்போது, பகிரக்கூடிய ஓர் இணைப்பைப் பெறுவீர்கள். அதன் மூலம் அதே வணிகக் குழு ஆர்டரில் பிறர் தங்களுக்கு விருப்பமானவற்றைச் சேர்க்க முடியும். இவற்றைச் செய்யலாம்:
- நீங்களே அனைவருக்கும் பணம் செலுத்தலாம்
- ஒவ்வொரு விருந்தினரும் அவரவர் பங்கிற்கு பணம் செலுத்தலாம்
வணிகக் குழுவிற்கான ஆர்டரைச் செய்யநீங்கள் ஒரு வணிக சுயவிவரத்தை உருவாக்க வேண்டும். வணிகச் சுயவிவரம் இல்லாமல், உங்கள் நிறுவனத்தின் மேமெண்ட் முறையில் உணவிற்கான பணத்தைச் செலுத்த முடியாது.
வணிகக் குழுவிற்கான ஆர்டரைச் செய்ய:
- Uber Eats ஆப்பில் உள்நுழையவும் அல்லது ubereats.com என்ற தளத்திற்குச் செல்லவும்.
- உங்கள் வணிகச் சுயவிவரத்தைத் தேர்ந்தெடுத்து, பின் நீங்கள் ஆர்டர் செய்ய விரும்பும் மெர்சென்டைக் கண்டறியவும்.
- "குழு ஆர்டர்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- டெலிவரி முகவரி அல்லது செலவு வரம்பு போன்ற குழு ஆர்டரின் நீங்கள் திருத்த விரும்பும் விவரங்களைத் திருத்தவும். நீங்களே அனைவருக்கும் பணம் செலுத்துதல் அல்லது பில் தொகையைப் பகிர்ந்து கொள்ளுதல் என்பதையும் தேர்வு செய்யலாம்.
- "விருந்தினர்களை அழைக்கவும்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் அனுப்புவதற்கான இணைப்பை வழங்கும்.
- நீங்களும் ஆர்டரில் பங்கேற்கிறீர்கள் என்றால் உங்களுக்கானப் பொருட்களைச் சேர்க்கவும்.
- அனைவரும் தங்கள் பொருட்களைச் சேர்த்தவுடன், "ஆர்டரைக் காண்க" மற்றும் "செக் அவுட்டுக்குச் செல்க" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- குழு ஆர்டர் தயாராக இருந்தால், “ஆர்டரை உறுதிசெய்து தொடர்க” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உறுதி செய்த பின், விருந்தினர்களால் கூடுதல் பொருட்களைச் சேர்க்கவோ திருத்தவோ முடியாது. அது தயாராகவில்லை என்றால், "திரும்பச் செல்க" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- ஆர்டர் விவரங்களை மீண்டும் மதிப்பாய்வு செய்து, திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
- "குழு ஆர்டர் செய்க" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.