ஆப்பில் உங்கள் பெயர், மின்னஞ்சல், தொலைபேசி எண் மற்றும் சுயவிவரப் படத்தை நீங்கள் புதுப்பிக்கலாம்: திரையின் அடிப்பகுதியில் உள்ள "கணக்கு" என்பதைத் தட்டவும். உங்கள் சுயவிவர ஐகானைத் தட்டி, பின்னர் "கணக்கைத் திருத்தவும்" என்பதைத் தட்டவும். நீங்கள் மாற்ற விரும்பும் விவரத்தைத் தட்டி, புதுப்பிக்கப்பட்ட தகவலை உள்ளிடவும். நீங்கள் செய்த மாற்றத்தை உறுதி செய்ய நீங்கள் சரிபார்ப்புக் குறியீட்டையோ நடப்புக் கடவுச்சொல்லையோ உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள்.
உங்கள் கணக்கில் நீங்கள்தான் மாற்றங்களைச் செய்கிறீர்கள் என்பதை உறுதி செய்துகொள்ள நாங்கள் சரிபார்ப்புக் குறியீடுகளைப் பயன்படுத்துகிறோம். நீங்கள் மாற்றும் விவரங்களின் அடிப்படையில் என்ன எதிர்பார்க்கலாம் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
தொலைபேசி எண்: நீங்கள் உரைச் செய்தி மூலம் சரிபார்ப்புக் குறியீட்டைப் பெறுவீர்கள். மாற்றத்தை உறுதிசெய்ய ஆப்பில் குறியீட்டை உள்ளிடவும்.
மின்னஞ்சல்: உங்கள் புதிய முகவரிக்கு நாங்கள் சரிபார்ப்புக் குறியீட்டை மின்னஞ்சலில் அனுப்புவோம். மாற்றத்தை உறுதிசெய்ய ஆப்பில் குறியீட்டை உள்ளிடவும். உங்கள் பழைய மின்னஞ்சல் முகவரிக்கும் நாங்கள் ஓர் அறிவிப்பு மின்னஞ்சலை அனுப்புவோம். நீங்கள் மின்னஞ்சலைப் பெறவில்லை எனில், புதிய குறியீட்டைக் கோருவதற்கு முன் உங்களது ஸ்பேம் அல்லது ஜங்க் கோப்புறைகளையும், மின்னஞ்சல் முகவரியில் உள்ள எழுத்துக்கள் சரியாக உள்ளனவா என்பதையும் உறுதிசெய்து கொள்ளுங்கள். நீங்கள் அப்போதும் சரிபார்ப்புக் குறியீட்டைப் பெறவில்லை என்றால், "எனக்குச் சிக்கல் உள்ளது" என்பதைத் தட்டுங்கள்.
கடவுச்சொல்: ஆப்பில் உங்கள் தற்போதைய கடவுச்சொல்லை உள்ளிடும்படி அறிவுறுத்தப்படுவீர்கள். கடவுச்சொற்களில் குறைந்தது 5 எழுத்துக்குறிகள் இருக்க வேண்டும்.
பின்வரும் பரிந்துரைகளைப் பின்பற்றுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்:
உங்களிடம் ஓட்டுநர் அல்லது டெலிவரி செய்பவர் கணக்கு இருந்தால், உங்கள் Rider அல்லது Uber Eats கணக்கு இணைக்கப்படலாம். உங்கள் தொலைபேசி எண், மின்னஞ்சல் அல்லது கடவுச் சொல்லை ஒரு கணக்கில் புதுப்பித்திருந்தால், அது இரண்டு கணக்குகளிலும் பிரதிபலிக்கும்.
உங்கள் பெயரில் சில மாற்றங்கள் அனுமதிக்கப்படாது என்பதை நினைவில் கொள்ளவும், அவை:
உங்கள் தனிப்பட்ட தகவலைப் புதுப்பிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் இங்கே.