நீண்ட பயணங்களை ஏற்றுக்கொள்வது

நீங்கள் வாகனம் ஓட்ட விரும்பும் உங்கள் தற்போதைய இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள சேருமிடத்திற்கு நீங்கள் எப்போதாவது ஒரு பயண கோரிக்கையைப் பெறலாம். இந்த கோரிக்கைகளில் ஒன்று உங்களுக்கு அனுப்பப்படும்போது உங்கள் திரையின் அடிப்பகுதியில் மதிப்பிடப்பட்ட பயண நேரத்துடன் "நீண்ட பயணம்" என்பதை காண்பீர்கள்.

நீங்கள் ஓட்டுவதற்கு தயாராக இருப்பதைவிட நீண்ட தூரத்திற்கான கோரிக்கையைப் பெற்றால், அதை அக்செப்ட் செய்யாதீர்கள். கோரிக்கை தானாகவே அருகிலுள்ள மற்றொரு ஓட்டுநருக்கு அனுப்பப்படும். நீங்கள் தற்செயலாக கோரிக்கையை அக்செப்ட் செய்துவிட்டால், தயவுசெய்து பயணத்தை ரத்து செய்யவும்.

குறிப்பு: சில பயணங்கள் சில மணிநேரங்களுக்குப் பிறகு தானாகவே முடிவடையும். இது நடப்பதற்கு முன் உங்களுக்கு அறிவிக்கப்படும், மேலும் உங்கள் பயணி தொடர விரும்பினால் புதிய பயணத்தைக் கோரலாம். இந்த அறிவிப்புகளில் ஒன்றை நீங்கள் பெறும்போது பயணம் முடிவடையும் என்பதை பயணிக்கு தெரியப்படுத்த பரிந்துரைக்கிறோம்.