துணை சாதனங்களை இணைத்தல்

மாற்றுத்திறனாளிப் பயணிகளை அழைத்துச் செல்வது குறித்த அனைத்து மாகாண, மத்திய மற்றும் உள்ளூர் சட்டங்களுக்கும் இணங்கிநடக்க வேண்டும் என ஓட்டுநர்களிடம் Uber எதிர்பார்க்கிறது.

அதன்படி, Uber Driver ஆப்பைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள், சுயமாக வாகனத்தில் ஏற முடியாத மாற்றுத் திறனாளிகளுக்குச் சேவை செய்ய மறுப்பதையும், மடக்கும் சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள், கைத்தடிகள், வாக்கர்கள் போன்ற உதவிச் சாதனங்களை உள்ளே இழுத்துவைப்பதற்கு உதவ மறுப்பதையும் Uber இன் கொள்கை தடை செய்கிறது.

மாற்றுத் திறனாளிப் பயணிகளுக்கு சேவையளிப்பது குறித்த எங்கள் கொள்கைகளை மீறினால் நிரந்தரமாக Uber ஆப்பிற்கான அணுகலை இழக்க நேரிடலாம்.