பயணக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிறகு, தொலைபேசி அழைப்பு அல்லது ஆப் மூலம் நீங்கள் செய்தி அனுப்புவதன் மூலம் பயணியைத் தொடர்புகொள்ளலாம். சர்வதேச ரோமிங் கட்டணங்களைத் தவிர்க்க, ஆப் மூலம் செய்தி அனுப்பும் அம்சத்தைப் பயன்படுத்தும்படி பரிந்துரைக்கிறோம்.
நீங்கள் ஒரு செய்தி அனுப்பியதற்கான அறிவிப்பை உங்கள் பயணி பெறுவார். உங்கள் பயணி பதிலளித்தால், நீங்கள் புஷ் தகவலையும் உள்வரும் செய்தியையும் பெறுவீர்கள். செய்தி உரக்கப் படிக்கப்படும், மேலும் அதை நீங்கள் ஒப்புக்கொண்டதைத் தெரிவிக்க "தம்ஸ்-அப்" குறியை அனுப்பும் விருப்பத்தேர்வும் உங்களுக்கு இருக்கும்.
எங்கள் ஆப்பில் இருந்து செய்தி அனுப்பும் அம்சத்தின் மூலம் செய்தி அனுப்புவது உங்கள் தனிப்பட்டத் தகவலை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்கும். பயணம் முடிந்த பின் உங்கள் தனிப்பட்ட தகவலை உங்கள் பயணியால் அணுக முடியாது.
கிடைக்கூடிய இடங்களில், அனைவரின் தகவலையும் தனிப்பட்டதாக வைத்திருக்க, வாடிக்கையாளரின் எண்ணையும் உங்கள் எண்ணையும் ஆப் அநாமதேயமாக வைத்திருக்கும். இந்த அநாமதேய எண்கள் மாறிக்கொண்டே இருப்பதால், விரைவாக டயல் செய்யும் எண்ணாக அவற்றைச் சேமிக்க முடியாது.
This website uses third-party cookies to serve you relevant ads and provide personalisation by remembering your location. You may opt out from these cookies by selecting the "Opt out" button below. If you have an Uber account, you may opt out of the "sale" or "sharing" of your data here.