ஓட்டுநர் சுயவிவரங்கள்

பயணிகள் உங்களை அறிந்து கொள்ள உங்கள் ஓட்டுநர் சுயவிவரம் உதவும். உங்களுக்கு விருப்பமான வகையில் அவற்றை அமைத்துக் கொள்ளலாம். மேலும் உங்கள் ஆர்வங்கள், சாதனை பேட்ஜ்கள் மற்றும் பயணிகளின் பாராட்டுக்கள் போன்றவற்றைக் காட்சிப்படுத்திக் கொள்ளலாம்.

## தகவல்களை நான் எவ்வாறு திருத்தலாம் அல்லது அகற்றலாம்?

  1. ஆப்பின் மேல் வலது மூலையில் உள்ள உங்கள் புகைப்படத்தைத் தட்டவும்
  2. மேல் மெனுவில் உள்ள ““சுயவிவரம்”” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
  3. மேல் வலது மூலையில் உள்ள பென்சிலைத் தட்டவும்

பயணிகளின் கருத்துகளை அகற்ற, நீங்கள் அகற்ற விரும்பும் குறிப்பிற்கு அடுத்துள்ள ““X”” என்பதைத் தட்டவும்.

ஒரு கருத்தை அகற்றும்போது, 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்ற சமீபத்தியப் பயணத்தின் குறிப்பு ஒன்றை உங்கள் ஓட்டுநர் சுயவிவரம் தானாகவே சேர்க்கும். குறிப்பிட்ட குறிப்புகளை நீங்கள் அகற்றலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட கருத்தை மட்டும் காட்டும்படி தேர்ந்தெடுக்க முடியாது.

## என்ன தகவல் சேர்க்கப்பட்டுள்ளது?

உங்கள் சுயவிவரத்தில் தானாக உள்ளடங்குபவை: *நீங்கள் முடித்துள்ள பயணங்களின் எண்ணிக்கை *நீங்கள் எவ்வளவு காலமாக வாகனம் ஓட்டுகிறீர்கள் *கடைசி 500 பயணங்களிலிருந்து உங்கள் ஒட்டுமொத்தத் தரமதிப்பீடு *பயணி பாராட்டு பேட்ஜ்கள் *5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்ற உங்கள் சமீபத்திய 3 பயணங்களில் பயணிகள் வழங்கிய கருத்துகள் * மைல்கல் பேட்ஜ்கள்

பின்வரும் தனிப்பயனாக்கக்கூடிய தகவல்களில் இருந்து உங்களுக்கு விருப்பமானவற்றையும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் இது கட்டாயமில்லை: *நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் *நீங்கள் பேசும் மொழிகள் *உங்களைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள்

பயனர் உருவாக்கிய உள்ளடக்க வழிகாட்டுதல்கள்