கட்டணங்கள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன?

கட்டணங்கள் பின்வருமாறு கணக்கிடப்படுகின்றன:

- ஒரு அடிப்படைக் கட்டணம் (பிக்அப்பிற்கான விகிதம்)
- நேரத்தை அடிப்படையாகக் கொண்ட சம்பாத்தியம் (நிமிடத்திற்கான விலை)
- தூரத்தை அடிப்படையாகக் கொண்ட சம்பாத்தியம் (ஒரு மைலிற்கான விலை)
- சர்ஜ் விலையிடல் (பொருந்தினால்)
- பொருந்தக்கூடிய சுங்கக் கட்டணங்கள், கட்டணங்கள் மற்றும் ஊக்கத்தொகைகள்

உங்களின் அடிப்படைக் கட்டணம், ஒரு மைல் மற்றும் ஒரு நிமிடத்திற்கான கட்டணங்கள் உங்கள் நகரத்தின் குறைந்தபட்ச பயண சம்பாத்தியத் தொகையை விட குறைவாக இருந்தால், நீங்கள் "குறைந்தபட்ச கட்டணத்தைப்" பெறுவீர்கள். குறுகிய பயணங்களுக்கு நீங்கள் எப்போதுமே குறைந்தபட்சம் இவ்வளவு தொகைச் சம்பாதிக்கலாம் என்பதை இது உறுதி செய்கிறது.

குறிப்பு: ஒவ்வொரு பயணத்திற்கும், Uber சேவைக் கட்டணத்தைக் கழித்தப் பிறகான கட்டணத்தைப் பெறுவீர்கள்.

ஆப்பில் "சம்பாத்தியம்" தாவலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள எந்தவொரு பயணம் தொடர்பான வகைப்படுத்தப்பட்ட சாம்பாத்திய விவரத்தையும் "பயண விவரங்கள்" பக்கத்தில் நீங்கள் பார்க்கலாம்.

நகரம் மற்றும் வாகன வகுப்பின் அடிப்படையில் கட்டணங்கள் மாறுபடும், ஆனால் எங்கள் நகரங்கள் பக்கத்தில் உங்கள் நகரத்திற்கான கட்டணங்களை நீங்கள் பார்க்கலாம்.

முன்கூட்டிய கட்டணம்

சில நேரங்களில், பயணத்தின் தொடக்கத்தில், பயணிகளுக்குக் காட்டப்படும் மதிப்பிடப்பட்ட கட்டணம் (அவர்கள் உள்ளிடும் பிக்அப் மற்றும் டிராப் ஆஃப் இடங்களின் அடிப்படையில்) முன்கூட்டிய கட்டணம் எனப்படும்.

முன்கூட்டிய விலையானது எதிர்பார்க்கப்படும் பயண நேரம் மற்றும் தூரம், எதிர்பார்க்கப்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் அறியப்பட்ட சாலை மூடல்கள், அத்துடன் தேவை அதிகமாக இருக்கும் போது சர்ஜ் தொகை ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும். ஒரு சுங்கச்சாவடி வழியாகப் பயணிக்கும் போது, பயணத்தின் முடிவில் பயணம் செய்பவர் உங்களுக்குக் கட்டணத்தின் முழுத் தொகையையும் செலுத்துவார். பயணத்தில் எதிர்பார்த்ததை விட குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருந்தால், முன்கூட்டிய விலை மாற்றத்திற்கு உட்படும்.

சில பயணங்களில் திட்டமிடப்பட்டதை விட கணிசமான மாற்றங்கள் நிகழும். இது அவ்வப்போது நடக்கலாம் என்பதை நாங்கள் அறிவோம். இந்தச் சந்தர்ப்பங்களில், முன்கூட்டிய விலை பொருந்தாது மற்றும் நேரம், தூரத்தின் அடிப்படையில் உண்மையான கட்டணம் கணக்கிடப்படும். இது பின்வரும் எந்தச் சூழ்நிலையிலும் நிகழலாம்;

  • நீங்கள் எதிர்பாராத போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்கிறீர்கள் மற்றும் எதிர்பார்த்ததை விட பயண நேரம் அதிகமாகும் பொழுது
  • நீங்கள் மாற்றுப்பாதையில் செல்வதால், பயண தூரம் கணிசமாக அதிகரித்து, பயணம் மெதுவாகும் பொழுது
  • சேருமிடம் ஆரம்பத்தில் கோரப்பட்ட இடத்திலிருந்து கணிசமான தொலைவில் அல்லது நெருக்கமாக இருக்கும் பொழுது
  • அல்லது பயணி தனது ஆப்பில் நிறுத்தங்களைச் சேர்த்தல் அல்லது நீக்குதலைச் செய்யும் பொழுது

உங்கள் பயணக் கட்டணம் துல்லியமாக கணக்கிடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய,

  • GPS ஐப் பின்பற்றவும்
  • பயணி தங்கள் ஆப்பில் சரியான பிக்அப் & இறங்குமிடங்களைச் சேர்த்திருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்
  • பயணத்தின் போது, பயணி கூடுதல் நிறுத்தங்களைச் சேர்க்க விரும்பினால் ஆப்பில் (இங்கே விவரிக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றுவதன் மூலம்) அதைச் சேர்க்கும் படி அவர்களுக்கு நினைவூட்டுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.