ஒரு ட்ரிப்பில் பல நிறுத்தங்கள்.

ஒரு பயணத்தில் கூடுதலாக 2 நிறுத்தங்கள் வரை பயணிகளால் சேர்க்க முடியும். அவர்கள் ஆப்பில் இதைச் செய்யலாம்.

இந்தக் கூடுதலான நிறுத்தங்கள் உங்கள் பயண வரைபடத்தில் ஒரு கறுப்பு நிற சதுர ஐகானால் குறிக்கப்படுகிறது, இறுதி நிறுத்தம் ஒரு சிவப்பு நிறச் சதுரத்தால் குறிக்கப்படுகிறது.

நீங்கள் பயணத்தின் இடைப்பட்ட ஒரு நிறுத்தத்துக்கு வரும் போது, திரையின் அடிப்பகுதியில் நிறுத்தத்தை உறுதி செய் என்று ஒரு ஸ்லைடர் இருக்கும்.

இந்தப் பெட்டியை ஸ்லைடு செய்வதால் பயணியின் அடுத்த பயண நிறுத்தத்திற்கான உங்கள் வழிச்செலுத்தல் தானாக அமைக்கப்படும்.

பயணிகள் அனைவரும் தங்கள் இறுதி நிறுத்தத்தில் உங்கள் வாகனத்தில் இருந்து வெளியேறிய பின்னரே பயணத்தை நிறைவு செய் என்பதை ஸ்வைப் செய்ய வேண்டும்.

பயணத்தில் கூடுதலான நிறுத்தம் சேர்க்கப்படும் போது, நீங்கள் காத்திருக்கும் நேரமும் கூடுதலான பயணத் தூரமும் கட்டணத்தில் சேர்க்கப்படும்.

Uber Pool பயணங்களில் இந்த அம்சம் கிடைக்காது.