உங்கள் வங்கித் தகவலைப் புதுப்பிக்க:
1. ஓட்டுநர் ஆப்பைத் திறக்கவும்.
2. வாலெட்> அமைப்புக்கள்> வங்கிக்கணக்கு என்பதை தட்டவும்.
3. மேல் வலதுபுறத்தில் உள்ள 3 புள்ளிகளைத் தட்டி, "திருத்துக" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
4. உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை உள்ளிட்டு "முடிந்தது" என்பதைத் தட்டுங்கள்.
குறிப்பு: உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களில் செய்யப்படும் புதுப்பித்தல்கள் அல்லது மாற்றங்கள், உங்கள் வாராந்திர பேமெண்ட் கிடைப்பதை 3-5 வேலை நாட்கள் வரை தாமதமாக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். முடிந்தால், உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு முன் மாற்றங்களைச் சமர்ப்பியுங்கள், இதனால் உங்கள் அடுத்த பேமெண்ட் உங்கள் புதிய கணக்கில் செலுத்தப்படும். மாற்றங்கள் சரியான நேரத்தில் சமர்ப்பிக்கப்படாவிட்டால், உங்கள் சுயவிவரத்தை நாங்கள் புதுப்பிக்கும் வரை, உங்கள் சம்பாத்தியம் உங்கள் தற்போதைய வங்கிக் கணக்கிற்குச் செல்லக்கூடும்.