ஓட்டுநருக்குத் தரமதிப்பிடுதல்

தரமதிப்பீடுகள் என்பது பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் ஆகிய இருவருக்கும் சாதகமான அனுபவத்தை உறுதிப்படுத்துவதற்கு Uber-ஐ அனுமதிக்கின்றன, எனவே நாங்கள் அவற்றைத் தீவிரமாக கருத்தில் கொள்கிறோம். குறைந்த தரமதிப்பீடுகளைக் கொண்ட ஓட்டுநர்கள் Uber ஆப்பிற்கான Access-ஐ இழக்கக்கூடும்.

ஓட்டுநரை மதிப்பிட, பயணத்தின் முடிவில் ஆப்பில் உள்ள கட்டளைகளைப் பின்பற்றவும். உங்கள் மின்னஞ்சல் ரசீதின் கீழே உங்கள் ஓட்டுநரை மதிப்பிடும்படி கேட்கப்படுவீர்கள்.

பயணத்தின் போது கூட நீங்கள் ஒரு ஓட்டுநரை மதிப்பிட முடியும் (உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து):

  1. ஆப்பைத் திறக்கவும்.
  2. பிரதான திரையில், பயண விவரங்களை விரிவாக்க வெள்ளைத் திரையைத் தட்டவும்.
  3. “உங்கள் பயணம் எப்படிப் போகிறது?” என்பதற்கு அடுத்துள்ள “மதிப்பிடவும் அல்லது வெகுமதியளிக்கவும்” என்பதைத் தட்டவும்.
  4. உங்கள் ஓட்டுநரை மதிப்பிட விரும்பும் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை (1-5) தேர்ந்தெடுக்கவும்.
  5. நீங்கள் விரும்பினால் ஒரு வெகுமானத்தைச் சேர்த்து, "சேமி" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் ஓட்டுநரை மதிப்பிட்டால்:

  • 5 நட்சத்திரங்கள், அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் விருப்பத்தைப் பார்ப்பீர்கள். பயணத்தில் ஒரு குறிப்பிட்ட சிக்கல் இல்லாவிட்டால் பெரும்பாலான பயணிகள் 5-நட்சத்திர மதிப்பீட்டை வழங்குகிறார்கள்.
  • 5 நட்சத்திரங்களுக்கும் குறைவாக வழங்கினால், பொதுவான சிக்கல்களின் பட்டியலிலிருந்து பயணம் அல்லது ஓட்டுநர் குறித்த குறிப்பிட்ட பின்னூட்டங்களை வழங்கும்படி கேட்கப்படுவீர்கள். 1-நட்சத்திர மதிப்பீடு என்பது பொதுவாக ஓர் ஓட்டுநரிடம் தீவிரமான சிக்கல் இருந்ததைக் குறிக்கும்.

பயண விலை, ஆப் சிக்கல்கள் அல்லது சிரமமான POOL பொருத்தங்கள் போன்ற சிக்கல்கள் ஓட்டுநரின் தவறு அல்ல, எனவே அவற்றின் ஒட்டுமொத்த மதிப்பீட்டில் கணக்கிடப்படாது.

பயணத்தின் 30 நாட்களுக்குள் நீங்கள் ஓட்டுநருக்குத் தரமதிப்பிடலாம். நீங்கள் கொடுக்கும் தரமதிப்பீட்டை ஓட்டுநர் ஒருபோதும் பார்க்க மாட்டார்.