பயணத்திலிருக்கையில் நீங்கள் ஒரு பொருளைத் தொலைத்துவிட்டால், அதை மீட்டெடுப்பதற்கான எளிதான வழி, ஓட்டுநரை நேரடியாகத் தொடர்புகொள்கொள்வதாகும். அவரிடம் உங்கள் பொருள் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு, அதைத் திரும்பப் பெற ஒரு நேரத்தையும் இடத்தையும் ஏற்பாடு செய்யுங்கள்.
உங்கள் ஓட்டுநரைத் தொடர்புகொள்கொள்ள, கீழேயுள்ள இணைப்பைத் தட்டவும்.
ஓட்டுநர்கள் வாகனம் ஒட்டிக்கொண்டு இருக்கலாம், அதனால் உடனடியாகப் பதிலளிக்க முடியாமல் இருக்கலாம், எனவே தயவுசெய்து பொறுமையாக இருங்கள். உங்கள் ஓட்டுநர் தொடர்பிற்கு வரவில்லை என்றால், உங்கள் பொருள் பற்றி விவரிக்கும் மற்றும் உங்களைத் தொடர்புகொள்வதற்கான சிறந்த வழியைத் தெரிவிக்கும் குரலஞ்சலை அனுப்பவும்.
பயணம் முடிந்ததும், வாகனத்தில் இருக்கும் பொருட்களுக்கு நாங்களோ ஓட்டுநர்களோ பொறுப்பல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஓட்டுநரிடம் உங்கள் பொருள் இருப்பதாகவோ அவரால் அதை உங்களுக்கு வழங்க முடியும் என்றோ எங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது, மேலும் பயணத்தில் தொலைந்த பொருட்களுக்குக் காப்பீடு, அதற்கான பணத்தைச் திருப்பிச் செலுத்துதல் அல்லது மாற்றீடு ஆகியவற்றை எங்களால் வழங்க முடியாது.
உங்கள் பொருள் திருப்பியளிக்கப்பட்டதாக நீங்கள் அல்லது ஓட்டுநர் எங்களுக்குத் தெரிவிக்கும்போது, உங்கள் கணக்கில் ஒரு கட்டணத்தை (நாட்டின்படி தொகை மாறுபடும்) வசூலித்துவிட்டு நாங்கள் ஒரு ரசீது அனுப்புவோம். உங்கள் பொருளைத் திருப்பியளிக்க, ஓட்டுநர் அவரது தனிப்பட்ட பயண அட்டவணையில் இருந்து செலவழித்த நேரத்திற்காக இந்த முழுக் கட்டணமும் ஓட்டுநருக்கு அளிக்கப்படுகிறது.
ஓட்டுநர் தம்மிடம் உங்கள் பொருள் இருப்பதை உறுதிசெய்ததும், அனைவருக்கும் வசதியான ஒரு சந்திப்பு நேரத்தையும் இடத்தையும் அமைக்கவும். பாதுகாப்பான, பொது இடத்தில் சந்திக்குமாறு பரிந்துரைக்கிறோம்.
உங்கள் பொருளை நீங்கள் விரைவில் திரும்பப் பெறுவீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம், எனினும் ஒரு பயணம் முடிந்த பிறகு வாகனத்தில் விட்டுச்செல்லும் எந்தப் பொருளுக்கும் Uber அல்லது ஓட்டுநர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள். நாங்கள் உதவ காத்திருக்கிறோம், ஆனால் ஓட்டுநர்கள் தனி ஒப்பந்ததாரர்கள் என்பதால் அவர்களிடம் உங்கள் பொருள் இருப்பதற்கோ அதை அவர்கள் உங்களிடம் டெலிவரி செய்வார்கள் என்பதற்கோ எங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது.
This website uses third-party cookies to serve you relevant ads and provide personalisation by remembering your location. You may opt out from these cookies by selecting the "Opt out" button below. If you have an Uber account, you may opt out of the "sale" or "sharing" of your data here.