துப்பாக்கிகள் தொடர்பான கொள்கை

பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்படும் அளவிற்கு, ஆப்பைப் பயன்படுத்தும் போது, எந்த வகையான துப்பாக்கிகளையும் எடுத்துச் செல்வதை Uber தடைசெய்கிறது. இதில் அடங்குபவை:

  • பயணிகள்
  • பயணிகளின் விருந்தினர்கள்
  • ஓட்டுநர்கள்
  • டெலிவரி நபர்கள்

ஒரேயொரு சூழ்நிலையில் மட்டுமே, ஆப்பைப் பயன்படுத்தும் போது நாங்கள் துப்பாக்கியை அனுமதிப்போம் என்பதை கவனத்தில் கொள்ளவும். அது, துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்துப் பாதுகாப்பு நிர்வாக விதிகளின்படி நீங்கள் துப்பாக்கியை எடுத்துச் செல்வதாகும். அதாவது:

  • நீங்கள் துப்பாக்கியிலிருந்து தோட்டாக்களை அகற்றிவிட்டு அதை வாகனத்தின் டிக்கியில் இருக்கும் கடின வெளிப்பக்கமுள்ள கன்டெய்னரில் பூட்டிவைக்க வேண்டும்.
  • தோட்டாக் கலன்கள், கிளிப்புகள், வெடிமருந்துகள், போல்ட்டுகள், சுடுவதற்கான ஊசிகள் ஆகியவை உள்ளிட்ட அனைத்துப் பாகங்களும் வாகனத்தின் டிக்கியில் வைத்தே கொண்டுசெல்லப்பட வேண்டும்.

இந்தக் கொள்கைக்கு இணங்கத் தவறினால் கணக்கு முடக்கப்படலாம்.