எனது தொலைபேசியை ஒரு வாகனத்தில் தவறவிட்டுவிட்டேன்

உங்கள் கணக்கில் உள்நுழைய முடியவில்லையா?

உங்கள் தொலைபேசி எண்ணைச் சரிபார்க்கவோ உங்கள் கணக்கில் உள்நுழையவோ முடியவில்லை எனில், கீழே உள்ள இணைப்பைப் பின்தொடர்ந்து எங்களுடன் அரட்டையில் தொடர்புகொள்ளவும் என்பதைத் தேர்வுசெய்யவும்.

எங்கள் குழுவின் உறுப்பினருடன் இணைக்கப்படுவதற்கு முன், உங்கள் கணக்கின் விவரங்களைச் சரிபார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவீர்கள். உங்கள் கணக்கின் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்தத் தகவல் தேவை.

உங்கள் கணக்கு கண்டுபிடிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட பிறகு, உங்கள் ஓட்டுநருடன் உங்களை இணைக்க உதவக்கூடிய எங்கள் தொலைந்த பொருட்கள் குழுவிடம் நீங்கள் அனுப்பப்படுவீர்கள்.

உங்கள் கணக்கில் பயணத்தைக் கோரினீர்களா?

எங்களுடன் உரையாடும் போது கவனிக்க வேண்டியவை:

  • உங்கள் எண்ணைப் பகிர எங்களுக்கு அனுமதி வழங்குவதன் மூலம், இந்தப் பயணத்தின் ஓட்டுநருடன் Uber உங்கள் எண்ணைப் பகிர்ந்து கொள்ளும் என்பதையும், இந்தத் தொலைபேசி எண் மூலமாக ஓட்டுநர் உங்களை நேரடியாகத் தொடர்பு கொள்வார் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் பகிர ஒப்புக்கொண்ட தொலைபேசி எண்ணை ஓட்டுநர் பயன்படுத்தினால் அதற்கு Uber பொறுப்பேற்காது.

  • உங்கள் தொலைபேசியைத் திரும்பத்தர ஓட்டுநர் எடுத்துக்கொண்ட நேரத்திற்க்கும் முயற்சிக்கும் ஈடு செய்யும் வகையில், உங்கள் தொலைபேசியை நீங்கள் திரும்பப் பெற்றுக்கொண்டதும், உங்கள் கணக்கில் திருப்பியளித்தலுக்கான கட்டணம் வசூலிக்கப்படலாம் (இடத்திற்கு ஏற்றவாறு தொகை வேறுபடும்).

வேறு ஒருவர் பயணத்தைக் கோரினாரா?

வேறொருவர் கோரிய பயணத்தில் ஒரு வாகனத்தில் உங்கள் தொலைபேசியை நீங்கள் தவறவிட்டிருந்தால், தவறவிட்ட பொருளைப் பற்றி பயணத்தைக் கோரியவர் தனது Uber ஆப்பில் புகாரளிக்க வேண்டும்:

  1. முதன்மை மெனுவைத் திறக்க மெனு ஐகானைத் தட்டவும்.
  2. "உங்கள் பயணங்கள்" என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் நீங்கள் தொலைபேசியைத் தவறவிட்ட பயணத்தைத் தேர்ந்தெடுங்கள்.
  3. "தவறவிட்ட பொருளைக் கண்டுபிடிக்கவும்" என்பதைத் தட்டி, பின்னர் "தவறவிட்ட பொருளைப் பற்றி அறிய ஓட்டுநரைத் தொடர்புகொள்ளவும்" என்பதைத் தட்டவும்.
  4. பயணத்தை கோரியவர் ஓட்டுநரை அழைத்து உங்கள் தொலைபேசியைத் திரும்பப் பெற அவருடன் ஒருங்கிணைந்து செயல்பட தங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடலாம்.
  5. அவர்களால் ஓட்டுநரைத் தொடர்பு கொள்ள முடியாவில்லை எனில், “தவறவிட்டப் பொருளைக் கண்டுபிடிக்கவும்” பக்கத்திற்குச் சென்று, “தவறவிட்டப் பொருளைப் பற்றி அறிய எனது ஓட்டுநரை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அவர்கள் படிவத்தை நிரப்பினால், நாங்கள் உதவுவதற்காக தொடர்பில் இருப்போம்.

While we do sincerely hope you get your item back soon, neither Uber nor drivers are responsible for any items left in a vehicle after a trip ends. We’re here to help, but cannot guarantee that a driver has your item or can deliver it to you.