பேக்கேஜ் டெலிவரி - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Uber கனெக்ட் என்றால் என்ன?

உங்கள் பேக்கேஜ்களை ஒரு நியமிக்கப்பட்ட டிராப்ஆஃப் இடத்தில் காத்திருக்கும் நபருக்கு எடுத்துச் செல்ல ஓட்டுநரைக் கோர Uber கனெக்ட் அனுமதிக்கிறது.

நான் என்ன அனுப்ப முடியும்?

வாகனம் மூலம் வழங்கப்படும் பேக்கேஜ்களுக்கு, நீங்கள் சிறிய அல்லது நடுத்தர அளவிலான பேக்கேஜ்களை அனுப்பலாம், அவற்றில்:

  • தடைசெய்யப்பட்ட எந்தப் பொருட்களும் இருக்கக்கூடாது (தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலைக் கீழே பார்க்கவும்)
  • டெலிவரிக்கான எடை அல்லது மதிப்புக் கட்டுப்பாடுகளை மீறக்கூடாது
  • நடுத்தர அளவிலான வாகனத்தின் டிக்கியில் வசதியாகப் பொருந்தக்கூடியவையாக இருக்க வேண்டும்
  • மூடப்பட்டு, பாதுகாப்பாக சீல் செய்யப்பட்டு, பிக்அப்பிற்குத் தயாராக இருக்க வேண்டும்

பைக் அல்லது ஸ்கூட்டர் மூலம் வழங்கப்படும் பேக்கேஜ்களுக்கு, நீங்கள் சிறிய அல்லது நடுத்தர அளவிலான பேக்கேஜ்களை அனுப்பலாம், அவற்றில்:

  • தடைசெய்யப்பட்ட எந்தப் பொருட்களும் இருக்கக்கூடாது (தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலைக் கீழே பார்க்கவும்)
  • அதிகபட்சமாக மொத்த எடை 15 பவுண்டுகளும் ஒருங்கிணைந்த அதிகபட்ச மதிப்பு $100 ஆக இருக்க வேண்டும்
  • ஒரு பேக்பேக்கினுள் வசதியாகப் பொருந்தும் வகையில் இருக்க வேண்டும்
  • மூடப்பட்டு, பாதுகாப்பாக சீல் செய்யப்பட்டு, பிக்அப்பிற்குத் தயாராக இருக்க வேண்டும்

தடை செய்யப்பட்ட பொருட்கள்

உங்கள் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத வரையில், தடைசெய்யப்பட்ட பொருட்களில் இவை மட்டுமல்லாத பிற பொருட்களும் அடங்கும்:

  • மது
  • விலங்குகள்
  • துப்பாக்கிகள்
  • உடையக்கூடிய பொருட்கள்
  • பணம்/பரிசு அட்டைகள்/முதலியன.
  • பொழுதுபோக்கு மருந்துகள்

உங்கள் பேக்கேஜில் தடைசெய்யப்பட்ட பொருள் இருந்தாலோ அல்லது மேலே கொடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றவில்லை என்றாலோ, ஓட்டுநர் உங்கள் கோரிக்கையை ரத்து செய்யலாம்.

டெலிவரியை எவ்வாறு கோருவது?

டெலிவரியைக் கோர:

  1. Uber ஆப்பில் உள்ள பேக்கேஜ் ஐகானைத் தட்டவும்.
  2. "ஒரு பேக்கேஜை அனுப்புக" அல்லது "ஒரு பேக்கேஜைப் பெறுக" என்பதைத் தேர்ந்தெடுத்து அனுப்புநர் அல்லது பெறுநர்களின் தகவலை உள்ளிடவும். டெலிவரி பின்னைச் செயல்படுத்த இந்தத் தகவலை எப்போதும் மறக்காமல் நிரப்பவும்.
  3. "இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்" என்பதைத் தட்டவும்.
  4. பேக்கேஜ் வழிகாட்டுதல்களை மதிப்பாய்வு செய்து "புரிந்தது" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. டெலிவரி விவரங்களை மதிப்பாய்வு செய்து, டெலிவரி விருப்பங்களைத் தேர்ந்தெடுத்து, சிறப்பு வழிமுறைகளைச் சேர்க்கவும்.
  6. உங்கள் டெலிவரி கோரிக்கையை உறுதிப்படுத்தவும்.

டெலிவரியைக் கோரிய பிறகு உங்களால் பிக்அப் இடம் அல்லது டிராப் ஆஃப் இடத்தின் முகவரியை மாற்ற முடியாது.

டெலிவரி பின் என்பது ஒரு பேக்கேஜ் டெலிவரி செய்யப்பட்டதை உறுதிப்படுத்த உதவும் ஒரு வழியாகும், ஆனால் பின்னைப் பெற முடியாமல் போகும் நேரங்களும் இருக்கலாம். டெலிவரி பின்னை நீங்கள் செயல்படுத்தினால், இது உங்கள் ஆப்பில் தெரிவதோடு பொருளைப் பெறுபவருடனும் பகிரப்படும். பெறுநர் டெலிவரியை பிக்அப் செய்யத் தயாராக இருக்க வேண்டும் மேலும் ஓட்டுநருடன் பின் எண்ணைப் பகிர வேண்டும்.

டெலிவரி செய்யும் போது உங்கள் பேக்கேஜ் சேதமடைந்திருந்தால், நீங்கள் டெலிவரி செலவை திரும்பப் பெற விரும்பினால், டெலிவரி தேதியைத் தொடர்ந்து மூன்று வணிக நாட்களுக்குள் சேதத்தின் புகைப்படத்தையும் விவரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.

பேக்கேஜ்களுக்கு Uber காப்பீடு வழங்காது.

முழு விவரங்களைப் பெற விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் பார்க்கவும். விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மீறினால் அறிவிப்பு இல்லாமல் உங்கள் கணக்கைச் செயலிழக்கச் செய்ய நேரிடலாம்.

ஒருவரை ஆச்சரியப்படுத்தும் வகையில் பேக்கேஜை அனுப்ப முடியுமா?

டெலிவரி பெறுபவருக்கு நீங்கள் அறிவிக்கும்படி பரிந்துரைக்கிறோம், இதனால் அவர்கள் வாகனத்தில் இருந்து பேக்கேஜைப் பெற்றுக்கொள்ள ஓட்டுநரை சாலையோரத்தில் சந்திக்கலாம்.

நீங்கள் யாரையாவது ஆச்சரியப்படுத்த ஒரு பேக்கேஜை அனுப்பினால், Uber ஆப்பின் செய்திப் பிரிவில், பெறுநரின் வாசலில் பேக்கேஜை வைத்துவிடுமாறு ஓட்டுநருக்குத் தெளிவாக அறிவுறுத்த வேண்டும். இந்தக் கோரிக்கையை ஓட்டுநர் நிராகரிக்கலாம்.