Uber கனெக்ட் என்பது உங்கள் பேக்கேஜ் (களை) டிராப்-ஆஃப் இடத்தில் காத்திருக்கும் நபரிடம் கொண்டு செல்ல ஓட்டுநரைக் கோர அனுமதிக்கும் ஒரு விருப்பத்தேர்வு ஆகும்.
வாகனம் மூலம் டெலிவரி செய்யப்படும் பேக்கேஜ்களுக்கு, நீங்கள் பின்வரும் வகையில் சிறிய அல்லது நடுத்தர அளவிலான பேக்கேஜ்களை அனுப்பலாம்:
பைக் அல்லது ஸ்கூட்டர் மூலம் டெலிவரி செய்யப்படும் பேக்கேஜ்களுக்கு, நீங்கள் பின்வரும் வகையில் சிறிய அல்லது நடுத்தர அளவிலான பேக்கேஜ்களை அனுப்பலாம்:
உங்கள் பேக்கேஜில் தடைசெய்யப்பட்ட பொருள் இருந்தாலோ அல்லது மேலே கொடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றவில்லை என்றாலோ, ஓட்டுநர் உங்கள் கோரிக்கையை ரத்து செய்யலாம்.
குறிப்பு: நீங்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பேக்கேஜ்களை அனுப்பலாம். இந்த அம்சம் கோரப்பட்ட பயண அட்டையின் அடிப்பகுதியில் உள்ளது, மேலும் ஒரு பயனருக்கான அனைத்து செயலில் உள்ள பயணங்களையும் காண்பிக்கும் செயல்பாட்டு மையமும் உள்ளது. உங்கள் பேக்கேஜ் டெலிவரியை அதே வழியில் உள்ள பிற பேக்கேஜ்களுடன் குறைந்த கட்டணத்தில் பேட்ச் செய்வதற்கான விருப்பத்தை நீங்கள் காணலாம்.
குறிப்பு: தேர்ந்தெடுக்கப்பட்ட பிக்அப்/டெலிவரி முறையைப் பொறுத்து, பேக்கேஜை பெறுபவர் சாலையோரம் அல்லது வீட்டுவாசலில் ஓட்டுநரைச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். பெறுநரின் வாசலில் பேக்கேஜை விட்டுச் செல்லும்படி ஓட்டுநரிடம் நீங்கள் கேட்க வேண்டுமானால், அந்த அறிவுறுத்தல்களைச் சிறப்பு டெலிவரி அறிவுறுத்தல்களுக்கான பகுதியில் அல்லது ஆப்பில் உள்ள ஓட்டுநருக்கு அனுப்பும் செய்தியில் சேர்க்க வேண்டும்.
டெலிவரியின் போது உங்கள் பேக்கேஜ் சேதமடைந்திருந்து நீங்கள் டெலிவரி செலவைத் திரும்பப் பெற விரும்பினால், டெலிவரி தேதியைத் தொடர்ந்து மூன்று வணிக நாட்களுக்குள் சேதமடைந்த பொருளின் புகைப்படத்தையும் விவரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
பேக்கேஜ்களுக்கு Uber காப்பீடு வழங்காது. முழு விவரங்களைப் பெற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பாருங்கள். விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மீறினால் அறிவிப்பு இல்லாமல் உங்கள் கணக்கைச் செயலிழக்கச் செய்ய நேரிடலாம்.
டெலிவரியைப் பற்றிப் பெறுநருக்குத் தெரிவிக்கும்படி பரிந்துரைக்கிறோம். இதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிக்அப்/டெலிவரி முறையைப் பொறுத்து வாகனத்தில் இருந்து பேக்கேஜைப் பெற்றுக்கொள்ள வீட்டுவாசலில் அல்லது சாலையோரத்தில் அவர்கள் ஓட்டுநரைச் சந்திக்கலாம்.
நீங்கள் யாரையாவது ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு பேக்கேஜை அனுப்ப விரும்பினால், Uber ஆப்பின் செய்திப் பிரிவில், பெறுநரின் வீட்டுவாசலில் பேக்கேஜை வைத்துவிடுமாறு ஓட்டுநருக்குத் தெளிவாக அறிவுறுத்த வேண்டும். ஓட்டுநர் எப்போது வேண்டுமானாலும் இந்தக் கோரிக்கையை நிராகரிக்கலாம்.