எங்களைத் தொடர்புகொள்ளும் முன் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்:
உங்களது பேக்கேஜ் இன்னும் டெலிவரி செய்யப்படவில்லை எனில், நீங்கள் ஆப்பில் இருந்து ஓட்டுநரை அழைக்கலாம் அல்லது செய்தி அனுப்பலாம்.
உங்களது பேக்கேஜ் மிகவும் கனமாக இருப்பது, அவர்களின் வாகனத்திற்குள் வைக்க முடியாத அளவு மிகப் பெரியதாக இருப்பது, பாதுகாப்பாகப் பேக்கிங் செய்யப்படாமல் இருப்பது அதில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பது போன்ற எந்தவொரு காரணத்துக்காகவும் உங்கள் கோரிக்கையை ரத்துசெய்ய ஓட்டுநர்களுக்குச் சுதந்திரமுண்டு.
பேக்கேஜைப் பெறுபவர் கிடைக்கவில்லை எனில், சிக்கலைத் தீர்க்க அல்லது திருப்பியளிப்பதை ஒருங்கிணைக்க ஆப்பில் உங்களைத் தொடர்பு கொள்ள ஓட்டுநர் முயற்சி செய்யலாம். தேவைப்பட்டால், பேக்கேஜைத் திருப்பித் தருவது தொடர்பான செலவுகளுக்கு நீங்கள் பொறுப்பாவீர்கள்.
டெலிவரி செய்யும் போது உங்கள் பேக்கேஜ் சேதமடைந்திருந்தால், நீங்கள் டெலிவரி செலவைத் திரும்பப் பெற விரும்பினால், டெலிவரி தேதியைத் தொடர்ந்து மூன்று வணிக நாட்களுக்குள் சேதத்தின் புகைப்படத்தையும் விவரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். பேக்கேஜ்களுக்கு Uber காப்பீடு வழங்காது.