பேக்கேஜ் டெலிவரியில் இருந்து தடைசெய்யப்பட்ட பொருட்கள்

Uber கனெக்ட் மூலம் அனுப்பப்படும் பொருட்கள் அனைத்து சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் மற்றும் Uber கொள்கைகளுக்கு இணங்கியிருக்க வேண்டும். இந்தப் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சட்டவிரோதமான, பாதுகாப்பற்ற அல்லது தடைசெய்யப்பட்ட பிற பொருட்களை அனுப்புவது கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்தப் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளவை உட்பட, சட்டத்தை அல்லது எங்கள் கொள்கைகளில் எதையேனும் மீறும் பொருளை நீங்கள் அனுப்பினால், உங்கள் கணக்கை உடனடியாக இடைநிறுத்துவது அல்லது நிறுத்துவது உட்பட இவை மட்டுமல்லாமல், உகந்த, பிற திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். சட்டவிரோத அல்லது பாதுகாப்பற்ற பொருட்களை அனுப்புவது உரிமையியல் மற்றும் குற்றவியல் தண்டனைகள் உட்பட சட்ட நடவடிக்கைகளுக்கும் வழிவகுக்கலாம்.

எங்களைத் தொடர்புகொள்வதன் மூலம் Uber கொள்கைகள் அல்லது பொருந்தக்கூடிய சட்டத்தை மீறும் பொருட்கள் குறித்துப் புகாரளிக்க Uber உங்களை ஊக்குவிக்கிறது. நாங்கள் ஒவ்வொரு புகாரையும் முழுமையாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்போம்.

பின்வரும் பொருட்களுக்கு பேக்கேஜ் டெலிவரி தடைசெய்யப்பட்டுள்ளது:

  • மக்கள்
  • சட்டவிரோத பொருட்கள்
  • துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் அவற்றின் பாகங்கள்
  • மது
  • விரைவாகக் கெட்டுப்போகும் உணவு அல்லது பானங்கள் (எ.கா., சமைக்காத இறைச்சி அல்லது பால் பொருட்கள் போன்றவை)
  • மருந்துப் பொருட்கள், மருந்துச் சீட்டு இல்லாமல் கடையில் கிடைக்கும் மருந்துகள், வைட்டமின்கள் அல்லது துணை உணவுப்பொருட்கள்
  • பணம், பரிசு அட்டைகள், லாட்டரி சீட்டுகள் அல்லது மாற்றத்தக்கப் பத்திரங்கள்
  • கேளிக்கை சார்ந்த போதைப் பொருட்கள், போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கான உபகரணங்கள் அல்லது புகையிலைப் பொருட்கள்
  • ஆபத்தான அல்லது அபாயகரமான பொருட்கள், உட்பட:
    • வெடிபொருட்கள்
    • விஷத்தன்மையுள்ள அல்லது எரியக்கூடிய பொருட்கள் (எரியும் திரவத்தைக் கொண்ட வண்ணப்பூச்சுகள் அல்லது பசைகள் உட்பட)
    • 49 CFR பிரிவு 172.101 இல் உள்ள அபாயகரமான பொருட்கள் அட்டவணையில் அடையாளம் காணப்பட்ட வஸ்துகள் மற்றும் பொருட்கள் அல்லது 49 U.S.C. பிரிவு 5103 மற்றும் அதன் கீழ் அதைத் தொடர்ந்து வரும் பிரிவுகளில் அபாயகரமானது என தீர்மானிக்கப்பட்டு, 49 CFR, துணைத்தலைப்பு B, அத்தியாயம் I, துணை அத்தியாயம் C, அபாயகரமான கழிவுகள் (ஹைபோடெர்மிக் ஊசிகள் உட்பட மட்டுமல்லாமல் மற்ற பிற பொருட்கள்) அல்லது மருத்துவக் கழிவுகள் என்பதன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி எச்சரிக்கைப் பலகைகளுடன் மூடப்பட்டுக் கொண்டு செல்ல வேண்டிய அளவில் உள்ளவை.
  • திருடப்பட்ட பொருட்கள்
  • உடையக்கூடிய பொருட்கள்
  • பாலியல் சார்ந்த உதவிப் பொருட்கள்; ஆபாசமான அல்லது ஆபாசவியல் சார்ந்த பொருள்
  • கால்நடைகள், ஒழுங்குபடுத்தப்பட்ட சிற்றினங்கள் (எ.கா., தீங்கு விளைவிக்கும் களைச் செடிகள், தடைசெய்யப்பட்ட விதைகள்) அல்லது விலங்கு பாகங்கள், இரத்தங்கள் அல்லது திரவங்கள்
  • அனுப்புவதற்கு உங்களுக்கு அனுமதி இல்லாத ஏதேனும் பொருட்கள்
  • அச்சுறுத்தல் அல்லது துன்புறுத்தல் அல்லது மற்றவகையில் சமூக வழிகாட்டல்களை மீறுவதாக பெறுநரால் நியாயமான முறையில் உணரப்படுவதற்கு வாய்ப்புள்ள ஏதேனும் பொருட்கள்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் முழுமையானது அல்ல. மேலே உள்ள பட்டியலில் இல்லாத கூடுதல் பொருட்களைத் தடை செய்வதற்கான உரிமையை Uber தக்கவைத்திருக்கிறது.