ஊக்கத்தொகைக் குறியீட்டை எப்படிப் பயன்படுத்துவது?

ஆர்டரில் ஊக்கத்தொகைக் குறியீட்டைச் சேர்க்க, முதலில் உங்கள் கணக்கில் ஊக்கத்தொகை சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் கணக்கில் ஊக்கத்தொகைக் குறியீட்டைச் சேர்த்தல்

  1. முதன்மைத் திரையின் கீழே உள்ள சுயவிவர ஐகானைத் தட்டவும்.
  2. "ஊக்கத்தொகைகள்" மற்றும் "ஊக்கத்தொகையைச் சேர்" என்பதைத் தட்டவும்
  3. குறியீட்டை உள்ளிட்டு, "ஊக்கத்தொகையைக் சேர்" என்பதைத் தட்டவும்.

குறிப்பு: சில ஊக்கத்தொகைகள் தானாகவே உங்கள் கணக்கில் சேர்க்கப்படும்.

ஆர்டருக்கு ஊக்கத்தொகையைப் பயன்படுத்துதல்

(ஆர்டரைச் செய்யும் முன் இதை மறக்காமல் செய்யவும்.)

  1. உங்கள் கார்ட்டில் பொருட்களைச் சேர்த்து, "கார்ட்டைக் காட்டு" என்பதைத் தட்டவும்.
  2. கீழே உருட்டி, "ஊக்கத்தொகையைச் சேர்" என்பதைத் தட்டவும்.
  • ஊக்கத்தொகை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருந்தால், வேறு ஊக்கத்தொகைக் குறியீட்டைச் சேர்க்க, "விவரங்களைக் காட்டு" பின்னர் "ஊக்கத்தொகையைச் சேர்" என்பதைத் தட்டவும்.
  1. ஊக்கத்தொகைக் குறியீட்டை உள்ளிட்டு, ”ஊக்கத்தொகையைக் சேர்” என்பதைத் தட்டவும்.
  2. வாங்குதலை முடிக்க "ஆர்டர் செய்யவும்" என்பதைத் தட்டவும்.

குறிப்பு: சில உணவக ஊக்கத்தொகைகள் தானாக உங்கள் கணக்கில் சேர்க்கப்படும் மற்றும் பிற ஊக்கத்தொகைகளுக்கு முன் உங்கள் ஆர்டருக்குப் பொருந்தும். நீங்கள் ஒரு ஆர்டருக்கு ஒரு ஊக்கத்தொகையை மட்டுமே பயன்படுத்தலாம் என்பதைக் கவனத்தில் கொள்க.