உங்கள் ஆர்டரை மெர்ச்சன்ட் அல்லது டெலிவரி பார்ட்னர் ரத்து செய்யலாம். ரத்து செய்யப்படும் நிலையில், மீண்டும் சில நிமிடங்களில் அதே மெர்ச்சன்ட்டிடமோ வேறொரு மெர்ச்சன்ட்டிடமோ நீங்கள் ஆர்டர் செய்யலாம்.
. . .
மெர்ச்சன்ட்கள் ஏன் ஆர்டர்களை ரத்து செய்யலாம்
அவர்களிடம் ஒரு பொருள் தீர்ந்துவிட்டாலோ அல்லது அவர்கள் அதிக அளவு ஆர்டர் கோரிக்கைகளைப் பெற்றிருந்தாலோ இது நிகழலாம்.
ஒரு மெர்ச்சன்ட்டிடம் ஒரு பொருள் தீர்ந்துவிட்டால், உங்கள் ஆர்டர் தானாக ரத்தாவதற்கு முன் அதை புதுப்பிக்க 10 நிமிடங்களுக்குள் நீங்கள் ஒரு அறிவிப்பைப் பெறுவீர்கள்.
மெர்ச்சன்ட் உங்கள் ஆர்டரை ரத்து செய்தால் கட்டணம் வசூலிக்கப்படாது.
. . .
டெலிவரி பார்ட்னர்கள் ஏன் ஆர்டர்களை ரத்து செய்யலாம்
இது ஏன் நடக்கலாம் என்பதற்கான சில காரணங்கள்:
1. உங்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை
- டெலிவரி நபர்கள் உங்கள் டெலிவரி முகவரிக்கு வந்துசேரும் போது, உங்களைத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுவார்கள், எனவே ஆர்டர் வரும் என எதிர்பார்க்கப்படும் போது உங்கள் கைபேசியை அருகில் வைத்திருப்பது நல்லது.
- டெலிவரி பார்ட்னரால் உங்களைக் கண்டுபிடிக்கவோ தொடர்பு கொள்ளவோ முடியாவில்லை என்றால் டெலிவரியை ரத்து செய்யலாம்
- டெலிவரி பார்ட்னர் நீங்கள் கோரிய இடத்திற்கு வந்த பிறகு போதிய முயற்சி எடுத்தும் உங்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால், பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான தகுதியை நீங்கள் இழக்கலாம்.
2. கடை மூடப்பட்டிருந்தது
- டெலிவரிப் பார்ட்னர் மெர்ச்சன்ட்டை வந்தடைந்தபோது, எதிர்பாராத விதமாகக் கடை மூடப்பட்டிருக்கலாம்
3. நீங்கள் கோரிய பொருட்கள் கையிருப்பில் இல்லாததால் ஆர்டரை நிறைவேற்ற முடியவில்லை